சிவல் – Partridge

சிவல் – Indian Partridge – Ortygorius ponticerianus

To see the poems, please go to my site http://www.learnsangamtamil.com – Vaidehi Herbert

Kazhakam Tamil Akarathi says it is கவுதாரி.  The only time the word is used in Sangam poetry is in Pattinappalai line 77.   According to the University of Madras lexicon, it could be either Partridge (கவுதாரி) or Quail (காடை) .   Descriptions of the quail is very clear.  It is known as இதல் in Sangam poems. 

The only time this word is used in Sangam poetry is in this Pattinappalai poem.

பட்டினப்பாலை – ஆசிரியர் – கடியலூர் உருத்திரங் கண்ணனார்

காவிரிப்பூம்பட்டினத்துச் சேரிப்பகுதி
பறழ்ப் பன்றி பல் கோழி
உறைக் கிணற்றுப் புறச்சேரி
ஏழகத் தகரொடு சிவல் விளையாட (75-77)

கருத்துரை – குட்டிகளோடு பன்றிகளும் , பல வகையான கோழிகளும் உறைக் கிணறுகளும் இருக்கின்ற பட்டினத்துப் புறத்தே உள்ள சேரிப்பகுதியிலே, செம்மறி ஆட்டுக் கிடாய்களுடன், கௌதாரிப் பறவைகளும் விடையாடிக் கொண்டிருக்கும்.

சொற்பொருள் விளக்கம் –  பறழ்ப் பன்றி – குட்டிகளோடு பன்றியும், பல்கோழி – பலவகையான கோழி , உறைக் கிணற்று – உறையினை உடையதாக கிணறு, புறஞ்சேரி – பட்டினத்திற்குப்  புறத்தே உள்ள சேரிப்பகுதி  (தாழ்த்தப்பட் டோர் வாழும் பகுதி) , ஏழகம் – ஆடு , தகரொடு – கடாய்களோடு (ஆண் ஆடு) சிவல் – கௌதாரிப் பறவை அல்லது காடை, விளையாட- விளையாட

Advertisements
%d bloggers like this: